Saturday, May 15, 2010

என் காதல் சுவாசம்...



மலரே தினமும்

உன் முற்றத்து பாதை வழியே

செல்கிறேன்....

உனை தரிசிப்பதற்காய் அல்ல

உன் வாசத்தை சுவாசிப்பதற்காய்

பெண்ணே!...

நீ நடந்து செல்லும் சாலை ஓரங்களில்

நானும் நடந்து கொண்டிருக்கிறேன்

உனை பின் தொடர அல்ல

உன் காலடி சுவட்டிலாவது

என் நினைவலைகள் துளிர் விடும்

எனும் நப்பாசையால்.........

இனி என்னிடம் வார்த்தைக்கோ

பஞ்சம்...

யாரிடம் கடன் கேட்பது

உன் ரோஜா இதழ்கள்

உதிர்த்திட்ட

வார்த்தை முத்துக்கள் இல்லையோ!..

தேடுகின்றேன்

கடற்கரை ஓரங்களில் கிடைத்திடுமோ

கிடைத்தால்........

வடித்திடுவேன் என் கலைக்காவியத்தால்

பல கோடி கவிதைகள்.....

என்றும் அன்புடன்

அப்புகுட்டி.

**************************************************

கண்மணியே...


மனதுக்குச் சிறையிட்டு
கனவுகளைக் கல்லூரிப் பாடமாக்கினேன்.
கண்மணியே! உன் காதல் எனக்கு...
கை கூட வேண்டும் என்று...

என் மௌன இரவுகளின்
மலரே! உனை நினைத்து
மணிக்கணக்கில்
கவிதைகளை கிறுக்குகிறேன்...
உன்தன் மௌன மொழிகளை
கலைத்து விடுவதற்காக..

என் இதய ராணியே!..
நினைவுகள் கடந்த போது
நிசப்தமாய் ஒரு ராகம்
அது நீயோ!......
என்று நிமிர்ந்து நோக்கினேன்...
அதியசம்!..

உன் இனிய நிழல் என்னுடன்.
தூரத்து நிலவாய் துளிர் விடுகின்றது
அன்பே உந்தன் இனிய நினைவுகளை
என் இதயம் உணர்ந்த போது.
உண்டானது
உன் தாமரை பாதங்களை தழுவிட
கண்களிருந்து கண்ணீர் ஊற்றானது........
***************************************************

Wednesday, May 12, 2010

என்னவள் உறங்கி விட்டாள்


என் தேவதை உறங்க வான்
வேண்றும் என்றால்
வானானேன்..
கண்மணி என் மடிமேல்
உறங்க மலரானேன்..
என் விழி மூடாமல் என்
தேவதை தேகம் வருடினேன்
இப்போது என் தேவதை
உறங்கி விட்டால்..
நானோ உறக்கமின்றி!
மடியிலும் மனதிலும் சுமந்து கொண்டு.

அப்புகுட்டி
***********************************************
நேசமுடன் அப்புவின்...
ஆரம்ப பக்கம்