
மலரே தினமும்
உன் முற்றத்து பாதை வழியே
செல்கிறேன்....
உனை தரிசிப்பதற்காய் அல்ல
உன் வாசத்தை சுவாசிப்பதற்காய்
பெண்ணே!...
நீ நடந்து செல்லும் சாலை ஓரங்களில்
நானும் நடந்து கொண்டிருக்கிறேன்
உனை பின் தொடர அல்ல
உன் காலடி சுவட்டிலாவது
என் நினைவலைகள் துளிர் விடும்
எனும் நப்பாசையால்.........
இனி என்னிடம் வார்த்தைக்கோ
பஞ்சம்...
யாரிடம் கடன் கேட்பது
உன் ரோஜா இதழ்கள்
உதிர்த்திட்ட
வார்த்தை முத்துக்கள் இல்லையோ!..
தேடுகின்றேன்
கடற்கரை ஓரங்களில் கிடைத்திடுமோ
கிடைத்தால்........
வடித்திடுவேன் என் கலைக்காவியத்தால்
பல கோடி கவிதைகள்.....
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
**************************************************