Friday, June 3, 2011

அன்புத்தாயே!

ஆயிரம் கைகள்தான்
என்னை அணைத்தாலும்
என் அன்புத்தாயே
உன் அன்புக்கு
ஈடாகுமா???
உன் அன்புக்கு
மத்தியில்
எல்லாம்
காணாமல் போய்
விடுகின்றது.

ஏமாற்றத்தின் உச்சம்!

காதலை சிறைப்படுத்தி
இதயத்தை வதப்படுத்தி
என் இரத்தத்தில் நிறம்
பார்த்தளே
நியாயம் இல்லா
உன்தனுக்கு நானிலத்தில்
நாயும் வரா
உதவிக்கு

காதல் கிறுக்கன்

அப்புகுட்டியின் கிறுக்கல்

காதல் கனவெண்றை என் இதயத்தில்
விதைத்து
உன் நினைவை அதனுல்
சிறைப்படுத்தி திரைகள்
இட்டு வைத்து காத்திருநதேன்
பெண்ணே
நீயும் வந்தாய் காதல்
சிறைபட அல்ல
என் இதய திரயினை
கிளித்து அதன்
இரத்த துளிகளை
பதம் பார்க்க.
காதல் நினைவால் தேன்
சிந்தும் என்
இதயம்
இப்போது உன்
கையில் இரத்த
துளிகளை சிந்துகின்றது

Sunday, September 5, 2010

என் மனதிற்கு இனியவளே!

இனியவளே!
என்று உன்னைக் கண்டேன்
காலமெல்லாம் உன் நினைவில் நின்றேன்
உன்னை நினைத்தே என்னை
வழர்த்தேன்
உன் நினைவில் நானி(ன்)று
தவித்தேன்.


கனவுகளில் உன்னையே கன்டேன்
என்ன அன்பு உன்னிடத்தில் கன்டேன்
உன் மீது பாசம் கொன்டேன்
உன் பின்னால் நிழலாய்
தொடர்ந்தேன்


என் இதயத்தில் உன்னையே
சுமந்தேன்
உன் அன்பிலே ஆசைகள்
வழர்த்தேன்
மனதாற நான் உன்னை
நேசிக்கிறேன்


என் வாழ்வில் உன்னையே
நினைத்தேன்
உனக்காக இறைவனைத் துதிக்கிறேன்
உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன்


கர்ப்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்
அப்புகுட்டி
.
ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர்

Thursday, June 24, 2010

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்!

பெண்ணே நீ என்னை
பிரிந்து சென்றாலும்
கடைசி வரை என் இதழ்கள்
உனது நாமத்தையே
உச்சரிக்கிறது.
உப்புக்கடலின் நிறம் மாறலாம்
ஆனால் எனது அன்புக் கடலில்
நிறம் மாற்றம் கிடையாது
நான் நினைத்ததும் உன்னையே
இனி நினைப்பதும் உன்னையே
என்னுல் மறதிற்க்கு இடமே இல்லை
உன் நினைவில் எனக்கு
விபத்துக் கூட ஏற்படலாம்
அப்போது கூட என் இதழ்கள்
உன் நாமத்தையே உச்சரிக்கும்.
பெண்ணே!
அப்புகுட்டி
.

கண்மணியே...

மனதுக்குச் சிறையிட்டு
கனவுகளைக் கல்லூரிப் பாடமாக்கினேன்.
கண் மணியே! உன் காதல் எனக்கு...
கை கூட வேண்டும் என்று.

என் மௌன இரவுகளின்
மலரே! உனை நினைத்து
மணிக்கணக்கில்
கவிதைகளை கிறுக்குகிறேன்.
உன்தன் மௌன மொழிகளை
கலைத்து விடுவதற்க்காக

என் இதய ராணியே!
நினைவுகளக் கடந்த போது
நிசப்தமாய் ஒரு ராகம்
அது நீயோ!......
என்று நிமிந்து நோக்கினேன்.
அதியசம்


உன் இனிய நிழல் என்னுடன்.
தூரத்து நிலவாய் துளிர் விடுகின்றது
அன்பே உன்தன் இனிய நினைவுகளை
என் இதயம் உணர்ந்த போது
உண்டானது
உன் தாமரை பாதங்களை தழுவிட
கண்களிருந்து விழி ஊற்றாய் நீர்........


என் காதல் சுவாசம்...

மலரே தினமும்
உன் முற்றத்து பாதை வழியே
செல்கிறேன்.
உனை தரிசிப்பதற்க்காய் அல்ல
உன் வாசத்தை சுவாசிப்பதற்க்காய்
பெண்ணே!
நீ நடந்து செல்லும் சாலை ஓரங்களில்
நானும் நடந்து கொண்டிருக்கிறேன்.
உன்னை பின் தொடர அல்ல
உன் காலடி சுவட்டிலாவது
என் நினைவலைகள் துளிர் விடும்
எனும் நப்பாசையால்.........
இனி என்னிடம் வார்த்தைக்கோ
பஞ்சம்.
யாரிடம் கடன் கேற்பது
உன் ரோஜா இதழ்கள்
உதிர்த்திட்ட
வார்த்தை முத்துக்கள் இல்லையோ!
தேடுகின்றேன்
கடற்கரை ஓரங்களில் கிடைத்திடுமோ
கிடைத்தால்........
வடித்திடுவேன் என் கலைக்காவியத்தால்
பல கோடி கவிதைகள்.....

என்றும் அன்புடன்
அப்புகுட்டி
.

நீ இல்லாத நான் !

காதலில்லா இவ்வையகம்
காற்றில்லா இயக்கம் போல
நீயில்லாத நான்
உயிரற்ற சடலம் போல

அண்பே!

அன்பே!
காய்ந்த சருகாய்
காயப்பட்ட
இதயத்துடன்
வீதியோரம் வீசப்படுகிறேன்
நியாயமான நிஜங்கள்
மறுக்கப்படுகின்ற போது...
உள்ளம்
அழுகிறது சிறுபிள்ளையாய்....
.

அன்பு அப்புக்கு அண்ணன் கலையின் பாராட்டுப்பத்திரம்....

அன்பு அப்புக்கு அண்ணன் கலையின் பாராட்டுப்பத்திரம்....

ஈகரைக்கோர் சிறப்புண்டு என்னவென்று வினவுவீரே
சோகமென்று வருவீரெனில் சோர்வுகள் சோர்ந்துபோகும்
வேகம் கொண்டு விரைந்து செல்லும் அன்பான அப்பு உண்டு
ஏகத்துக்கும் அன்புமழை... நனைந்தீரெனில் குளிர்ந்து போவீர்..

பாராட்ட வார்த்தை தேடி களைத்துப்போவீர் கட்டாயம்
சீராட்ட உண்டு எங்கள் அப்புவின் பாசக்குரல்தான்
தேரோட்டம் போல்தான்உண்டு தேனினிய அன்புச்சொற்கள்
யாராட்டம் என்றே நீங்கள் அன்னையை நினைவுகொள்வீர்...

தேடிநிதம் அதிசயங்கள் தேனியாய்ப் பதிவதிலும்தான்
ஓடிஓடி அன்பான வாழ்த்துக்கள் பதிவதிலும் தான்
வாடி நிற்கும் அன்புள்ளம் சிரித்திட உத்வுதல் தான்
நாடி நீ அழைத்துப்பாரேன் அன்பான அப்பு உண்டு....

புகைப்படங்கள் எங்கும் உண்டு ஆனாலும் அப்புசொல்லும்
வகையான அதிசயங்கள் வலைகளில் அற்புதங்கள்..
மிகையேதும் இல்லைசொல்லில் மிஞ்சிடும் கலைகள் இங்கே
சிகையழகு செய்திமுதல் சிக்கலான கலைகள் உண்டு...

அன்பாகக் கதைத்துப்பாரேன் அழகான குழந்தைதோற்கும்
முன்பாக வந்து உன்னை விரல்பிடித்துக் கதைகள் சொல்லும்
வம்பேதும் கண்டதில்லை வீண்வாதம் செய்வதில்லை
அம்புபோல் வந்தேநிதம் தனலட்சியம் தனிலே வெல்லும்...

சிற்றெறும்பு தன்னில் மிகுந்த எடையினைச் சுமக்கும் போலே
வற்றாத அன்பு நதியில் வகைபெறக் களிக்கும் அப்பு
தெற்றேதும் கூறிடஓர் தெள்ளுதமிழ் வரிகள் இல்லை
முற்றேதும் குறிக்கவியலா முடிவிலா அன்பன் அப்பு...

ஈகரைக்கு வந்தபின் தான் இவ்வன்பு பெற்றானோ இல்லை
தாகமுடன் கவிதை எழுத ஆர்வந்தனைக் கற்றானோ
வேகமாய் முன்னேறிஇங்கு காதல்தனைப் பெற்றானோ
ஏகத்துக்கும் காதல் வரிகள் எழுதி எம்மை அயரச்செய்தான்..

எட்டாத எண்ணிக்கை பத்தாயிரம் படைத்தான் இங்கே
தட்டாமல் பெரியோர் சொல்லை தலைமேல் தாங்கி நின்றான்
மொட்டாக இருந்த காதல் முகிழ்ந்திடக் கவிதை கண்டான்
கட்டாயம் இவனை இங்கே வாழ்த்தியே தீரல் முறையே...

ஒன்பது ரசங்கள் தன்னை உலகத்தில் கண்டிருப்பீர்
வம்பது ஏதுமின்றி பணிவது பத்தாம் ரசந்தான்
ஐம்பது வயதில்கொள்ளும் அருமையான பண்பதனை
முன்பதைப் பெற்றே இங்கு விளங்கிடும் அப்பு வாழ்க...

பத்தாயிரம் பதிவுக்கிங்கே பத்துப்பா எழுதஎண்ணி
முத்தான அப்புவுக்கு வரைந்துவிட்டேன் இப்பாபத்தும்
கொத்தாகக் கூத்துக்குலுங்கும் கவின்மலர் தன்னை ஈந்தே
அத்தாவை வணங்கி நானும் அப்புவுக்கே வழங்கினேனே....
என் இளவல் அப்புவை வாழ்த்திப் பெருமையுறும்...

அன்பு அண்ணன்
கலை

ஏக்கம்!

நீ நீயாக இரு பெண்ணே!

என் நெஞ்சினை
எவ்வளவுதான் அதட்டினாலும்
ஏனோ குறைவதில்லை.
உன்னைப்பற்றிய எதிர்பார்ப்புகள்.


ஓ... அன்பே என் நம்பிக்கையும்
என் எதிர் பார்ப்புகளும்
அதில் நசுக்கப்படுவது புரிய வில்லையா?


ரசம் சொட்ட சொட்ட
காதலைச் சொல்லி
என்னை ரணமாக்கியவளே! சொல்
உன் கௌரவத்திற்காய்
என் கனவுகளை சிதைத்து விட்டவளே!
காரணமற்ற என்னை
கதற வைத்து விட்டாயே!
நீ நானாகா விட்டாலும்
நீ நீயாக இருந்து
என் காதல் வலிக்கு
பதில் ஒன்று கூறு.......


என்றும் அன்புடன்
அப்புகுட்டி.

கிறுக்கல்கள்!

எத்தனை காலமானாலும்
எத்தனை பேரழகிகள்
என் வாழ்வில் வந்தாலும்
இடிதான் என் தலையில்
விழுந்தாலும்
மனதை விட்டுப்போகாது
நான் உன் மீது
கொண்ட காதலும்
உன்னைப்பற்றிய நினைவுகளும்
அப்புகுட்டி..

என் நினைவில் நீ!

என் மனதில் இருப்பவள்
நீ
மறக்கலாம் என்னை
நீ
மறக்க முடியுமா உன்னை
நான்
அப்படித்தான் மறக்கும்
காலம் வந்தாலும் மறந்திடுவேன்
என்னை நான்.

உன் நினைவு!

முகில்கள் மேகத்தை விட்டு
விலகுவதுமில்லை
மேகம் முகில்களை விட்டு
மறைவதுமில்லை
என்னுல் இருக்கும்
உன் நினைவுகளும்
அப்படித்தான்
என்னை விட்டுப்பிரிவதுமில்லை
என்னுல் இருக்கும்
காதலும்
இந்த மண்ணை விட்டு
மறைவதுமில்லை.

மறக்க முடிய வில்லை!

கண்ணே
உன்னைக் காதல் கொண்ட காலங்களில்
தினம் தினம் நினைக்கத்துடித்தேன்
அன்று..
உன்னை மறந்தாலும்
நம் காதல் நினைவலைகளை
மறக்கத் துடிக்கிறேன்
இன்று...
நான் உன்னுடன் என்ற
சொல் கேட்டு
என் நெஞ்சில் ஒட்டிக்கொண்ட
உன் விம்பம்
இன்று
புயல் காற்றில் மாட்டிய
காகிதம் போல்
திசை மாறி
போய் விட்டது கிழிந்து.
உன் உருவத்தை என் நெஞ்சை விட்டு
அகற்ற முடிந்த என்னால்
நம் காதல் நினைவுகளை
மறக்க முடியாமல் துடிக்கிறேன்.
ஏனோ தெரியவில்லை
இன்னும் என்காதல் ஞாபக தூரல்கள்
என் நெஞ்சை காயப்படுத்திச் செல்கின்றது.
அக்காயங்களை
என் காதல் நினைவால் சிந்தும்
கண்ணீர் கொண்டு
ஆற்றிடப் பார்க்கிறேன்.
ஆறிடுமோ மறக்க நினைத்த
என் காதல் நினைவுகள்.???

என் அருமைத் தம்பி அப்புவின் பிறந்த நாள்.


இன்று பிறந்தாய் சகோதரா....

உன் தாயின் மணிவயிறு குளிரநீ வந்தாய்..
என் பாசம் பகிர்ந்து அன்பே தந்தாய்...

உன்மழலை மொழி எனது இனிய இசைதான்..
என் கவலை அதில் கரையும் ஊக்க விசைதான்..

உனை நானும் நேரில் தான் கண்டதுமில்லை..
எனைப் போல வெண் மனம் தான் கொண்டது உண்மை...

அரிதாரம் பூசாத அருமைத் தும்பி...
உரித்தாகும் என் வாழ்த்து உனக்கே தம்பி..

இன்று மலர்ந்த அழகான அல்லிப்பூவே...
என்றும் நீ மனம் மகிழ வாழ்த்தும் நெஞ்சே..

அழகான வாசகங்கள் அரவணைக்கும் உன்
பழ்குமுறை எவரையுமே வசப்படுத்தும்...

எளிய தொரு பட்டாம்பூச்சி நீயே என்பேன்
துளிகூட மருவில்லா நிலவே நீதான்...

வாழ்க்கையிலே நீகண்ட ஏழ்மை எல்லாம்.
சீழ்க்கையிலே கரைந்துவிடும் சிறப்பாய் நன்றே..

தோற்கையிலே தோள் கொடுக்க அண்ணனிங்கே
வேடகையிலே குளிர் மோராய் நானும் நிற்பேன்...

நடைபோட்டு நல்விதமாய் முன்வருவாயே
தடை எல்லாம் பொடிதாகும் தங்கக்கம்பி...

ஈகரையின் கரைசேர்ந்த அன்புப்படகே உனை
சோகமுடன் காணா நிலை இறை தருவானே...

இன்றைப்ப்போல் முகம் மலந்து என்றும் நீயும்
கன்றைப்போல வலம் வந்து களிப்பாய் நீயே...

என்னாளும் என்னன்பே முந்திடாதோ..
பொன்னாளும் உனைத தழுவ வந்திடாதோ...

குறையின்றிப் பெருவாழ்வு நீயும் வாழ
இறையை நான் தொழுது தினம் வேண்டினேனே...!


அன்புடன்

கலை அண்ணா..