Sunday, June 13, 2010

என் அன்புத் தாயை எண்ணி வரைந்த வரிகள்...

உலகிற்கு என்னை அறிமுகப்படுத்த
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கரு வறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.


என் அன்புத் தாயே
உன் மகன் நலம் பெற
அன்று உன் சரீரத்தை
உன் குருதியை பாலாய் தந்தாய்.
இன்று உன் மகன் நலம் பெற
முள்ளைத் திண்று சதையை தந்து
உன் மகன் நலம் காத்தாயே என்
அன்புத்தாயெ உன்னைப் பற்றி ஏழுத
ஓரிரு வரிகள் போதாது

என் அன்புத்தாயே!
உன் மகன் நான் நோயின்
பிடியில் சிக்கிய போது
மருந்தாகவும் தாதியாகவும்
என் கஸ்டங்களை தனதாக்கிக்கொண்ட
என் அருமைத் தாயே
உன் புகழ் பாட ஓரிரு வரிகள் போதாது


என் அன்புத்தாயே!
நான் கஸ்டங்களில்
சோர்ந்து நிண்ற போது
ஆறுதல் என்னும்
ஊக்க மருந்து கொடுத்த
என் அருமைத்தாயே
உன் புகழ் பாட எனக்கு
ஓரிரு வரிகள் போதாது.

என் அன்புத்தாயே!
ஏழை மகன் நான்
உழைத்துக் கழைத்து நின்ற
போது
என் தோழ் தட்டி என் நெற்றி
வியர்வை துடைத்து
என் பசியாற்றிய என்
அன்புத்தாயே உன் புகழ் பாட
ஓரிரு வரிகள் போதாது.
என் அன்புத்தாயே
!
அன்பு மலர்ஐ லவ் யூமுத்தம்

No comments:

Post a Comment