Sunday, June 13, 2010

தாய் பற்றி நான் எழுதிய கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள்.

கலை அண்ணன்..

அப்பு... பொறுமையாக உங்கள் அனைத்து வரிகளையும் வாசித்தேன்...
அவற்றில் அலங்காரமில்லை... சொல்நயம் இல்லை... வார்த்தை ஜாலம் இல்லை..ஆனால்....

தன் தாயைநினைந்து உருகும் ஓர் உன்னத மகனைக் காண்கிறேன்,,,

உஙகளைப்பற்றி நான் எழுதிய கவிதையில் அப்புவை ஈன்ற மணிவயிறு என்று குறித்திருந்தேன்... அது வெறும் வார்த்தை விளையாட்டு இல்லை.. என் மனதாற உங்களைப் போன்ற மகவைப்பெற்ற அந்த உன்னதத்தாயை வணங்கி எழுதிய வரி தான் அது,,,

இன்று உங்கள் மனம் முழுக்க நிறைந்து இருக்கும் அந்த அற்புதத்தாய்க்கு நீங்கள் பொழிந்த இந்த மலர்கள் என்னைக் கண்பனிக்கச் செய்துவிட்டது..

பெற்றால் அப்புவைப்போல ஒரு மகனைப்பெறவேண்டும்... இல்லை என்றால் மலடியாய் இருக்கவேண்டும் என்று உரக்கச்சொல்லத்தோன்றுகிறது..

என் தாயை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்... உருவம் எனக்கு அறியவில்லை என்றாலும் என் தாயும் உங்கள் தாய் போலத்தான் இருந்திருக்கவேண்டும் என மனதாற நினைக்கிற்து...

அந்த தாய்க்கு --- உங்கள் தாயெனில் எனக்கும் தாய் தானே.. என் வணக்கத்தைத் தெரியப்படுத்துஙக்ள் ... என்றும் குறையாத வளம் பெற்று நீங்கள் வாழ எல்லாம் வல்ல அந்த இறையை வேண்டுகிறேன்..

ஆதிரா மேடம்....

அப்பு அழகான கவிஞர் நீங்கள்.. கவிஞர் மட்டும் இல்ல அழகான மென்மையான உள்ளம் கொண்ட மனிதர் நீங்கள்...பாசமான பிள்ளையும் நீங்கள்... உங்கள் நட்பு எனக்குப் பெருமையாக இருக்கிறது... இன்னும் இன்னும் உங்களுடனான நட்பு தொடரும் வரம் வேண்டும் மனதுடன்...பெருமையாக...

பாலன் அண்ணன்

பலநாடுகளில் (இலங்கை, இந்தியா உள்ளிட்ட) இன்று அன்னையர் தினம் இன்றைய இனிய நாளில் உங்கள் கவிதை அம்மாவைப் பற்றிக் காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி,
மன்றத்திலுள்ள அன்னையர்கள் அனைவரிற்கும் அன்னையர் தின வாழ்த்துகள் அன்பு மலர்

சரவணன்.




வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

ஹாசிம்

ஆனந்தக்கண்ணீர் வருகிறது நண்பா தாயை பிரிந்து தவிக்கும் எமக்கு வரிகள்தான் ஆறுதலாகிப்போனது

ஹனி

அப்பு உங்கள் தாய்க்கு நீங்கள் பாடிய கவிதைகள் அனைத்தும் அருமை அப்பு
மனம் நெகிழ்கிறது.

அனைவரும் என் அன்பு நன்றிகள் அன்பு உறவுகளே
என்றும் உங்கள் அன்பில் வாழும்
அன்பு அப்புகுட்டி.

No comments:

Post a Comment